ADDED : ஆக 17, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வெண்ணிலா நகர் அரசு தொடக்கப் பள்ளியில், கவி பாரதியார் சங்கத்தின் சார்பின் 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, சங்க தலைவர் ராமசாமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.
செயலாளர் சேவை திட்டம் சுரேந்தர், பொருளாளர் அசோக்குமார் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சங்க மூத்த தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
