ADDED : ஆக 20, 2025 11:51 PM

புதுச்சேரி, : முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு கவர்னர், முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி அரசு சார்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, தட்டாஞ்சாவடி ராஜிவ் சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமிஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் சாய் சரவணன்குமார், ரமேஷ், பாஸ்கர், அரசுச் செயலர் முகமது அசான் அபித், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் சுரேஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து,முதல்வர் ரங்கசாமி சத்பவனா உறுதிமொழி வாசிக்க, அனைவரும் எடுத்துக் கொண்டனர். சர்வமத பிரார்த்தனையுடன் பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.