/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கும் பணி
/
ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கும் பணி
ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கும் பணி
ராமர் கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் வழங்கும் பணி
ADDED : ஜன 08, 2024 04:45 AM

திருக்கனுார்: அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருக்கனுாரில் வீடு வீடாக ராமரின் அட்சதை, கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்தது.
அயோத்தியில் ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த சேஷத்ர டிரஸ்ட் மூலம் ராமர் அருள்பாளித்த அட்சதை கலசம் பூஜை செய்து, கடந்த 19ம் தேதி மண்ணாடிபட்டு தொகுதிக்கு வந்தது.
அட்சதை கலசத்தை அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்று, கே.ஆர்.பாளையம் மாரியம்மன் கோவிலுக்குகொண்டு சென்று, அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து, ராமர் அருள்பாளித்த அட்சதை, கும்பாபிஷேக அழைப்பிதழ், கோவில் மாதிரி புகைப்படம் உள்ளிட்டவைகளை மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனுார், கூனிச்சம்பட்டு, லிங்காரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு வீடாக சென்று வழங்கும் பணி நடந்தது.