தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமித்ஷாவை சந்திக்கும் முன் நள்ளிரவில் ரங்கசாமி ஆலோசனை

 அமித்ஷாவை சந்திக்கும் முன் நள்ளிரவில் ரங்கசாமி ஆலோசனை

 அமித்ஷாவை சந்திக்கும் முன் நள்ளிரவில் ரங்கசாமி ஆலோசனை


ADDED : பிப் 15, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அமித்ஷாவை சந்திக்கும் முன்பாக முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்., நிர்வாகிகளுடன் நள்ளிரவு வரை நடத்திய ஆலோசனை கூட்டத்தால் பரபரப்பு நிலவியது.

காரைக்காலிற்கு நேற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முதல்வர் ரங்கசாமி பேசினார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்., -16 சீட்டும், பா.ஜ.,விற்கு -14 சீட்டும் உறுதியாகியுள்ளது. இதில் பா.ஜ., கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., மற்றும் ல.ஜ.க., கட்சிகளுக்கு அவர்கள் சீட்டுகளை பிரித்துக் கொடுக்க வேண்டும்.

இந்நிலையில், காரைக்காலிற்கு நேற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தொகுதி பங்கீடு மற்றும் மாநிலத்தில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அமித்ஷா சந்திப்பிற்கு முன்பாக தங்களது கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்பதற்கு நேற்று முன்தினம் இரவு, புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள சன்வே ஓட்டலில் முதல்வர் ரங்கசாமி என்.ஆர்.காங்., நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில், அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசுக்கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயபால், துணைத் தலைவர் பக்தவச்சலம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நள்ளிரவு வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்ததால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us