/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரங்கசாமி 'டம்மி' முதல்வர் காங்., செய்தி தொடர்பாளர் தாக்கு
/
ரங்கசாமி 'டம்மி' முதல்வர் காங்., செய்தி தொடர்பாளர் தாக்கு
ரங்கசாமி 'டம்மி' முதல்வர் காங்., செய்தி தொடர்பாளர் தாக்கு
ரங்கசாமி 'டம்மி' முதல்வர் காங்., செய்தி தொடர்பாளர் தாக்கு
ADDED : ஜூலை 06, 2025 06:46 AM

புதுச்சேரி : 'என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியில் கொண்டு வந்த உட்கட்டமைப்பு திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல முடியுமா என, அகில இந்திய காங்., செய்தி தொடர்பாளர் டோலி சர்மா கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி காங்., அலுவலகத்தில் அவர், கூறியதாவது:
புதுச்சேரி மாநிலம் மண்ணின் மைந்தர்களுக்கானது. ஆனால் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி டில்லியின் ரிமோட் கன்ட்ரோலில் இருக்கிறது. மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, இங்குள்ள கவர்னர் வழியாக ஆட்சி நடத்துகின்றனர். முதல்வர் ரங்கசாமி டம்மி முதல்வராக தான் உள்ளார்.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு தேர்தலுக்கு முன் பல்வேறு வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தொழிற்சாலைகளை கொண்டு வந்து பல ஆயிரம் பேருக்கு வேலை தருவதாக கூறினார்கள். 5 ஆயிரம் பேருக்கு கூட வேலை தரவில்லை.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கோவில் நிலத்தை கூட விட்டு வைக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் பல்வேறு ஊழல்கள். அது ஸ்மார்ட் சிட்டி அல்ல; ஸ்மார்ட் சிட்டி ஸ்கேம். எதனையும் தடுக்க முடியாத பொம்மை ஆட்சி தான் புதுச்சேரியில் நடக்கிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்பதால் தான் முதல்வர் ரங்கசாமி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ., கூட்டணி அரசு புதுச்சேரி மாநில அந்தஸ்து தரவில்லை.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசில் கொண்டு வந்த உட்கட்டமைப்பு திட்டங்களை சொல்ல முடியுமா. புதுச்சேரியில் ஆளும் கட்சிகளின் உண்மையான முகத்தினை மக்கள் மன்றத்தில் வைத்து சட்டசபை தேர்தலை சந்திப்போம். புதுச்சேரியில் மீண்டும் காங்., ஆட்சி மலரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உடனிருந்தனர்.