/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரஞ்சி கோப்பை லீக் போட்டி: புதுச்சேரி அணி அபார வெற்றி
/
ரஞ்சி கோப்பை லீக் போட்டி: புதுச்சேரி அணி அபார வெற்றி
ரஞ்சி கோப்பை லீக் போட்டி: புதுச்சேரி அணி அபார வெற்றி
ரஞ்சி கோப்பை லீக் போட்டி: புதுச்சேரி அணி அபார வெற்றி
ADDED : ஜன 09, 2024 07:16 AM
புதுச்சேரி : ரஞ்சி கோப்பைக்கான லீக் போட்டியில் டில்லி அணியை விழ்த்தி, புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரஞ்சி கோப்பைக்கான லீக் போட்டிகள் நடந்து வருகிறது.கடந்த 5ம் தேதி டில்லியில் துவங்கிய 4 நாள் ரஞ்சிப் போட்டியில் புதுச்சேரி மற்றும் டில்லி அணிகள் மோதின.
டாஸ் வென்ற புதுச்சேரி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டில்லி அணி முதல் இன்னிங்சில் 148 ரன்களுக்கு சுருண்டது.புதுச்சேரி அணியின் கவுரவ் யாதவ் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களை சாய்த்தார்.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய புதுச்சேரி அணி பராஸ் ரதனபார்க்கேயின் 60 ரன்கள், கிருஷ்ணா பாண்டேவின் 44 ரன்களுடன் 244 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
96 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய டில்லி அணி மீண்டும் புதுச்சேரி அணியின் பந்து வீச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் 145 ரன்களுக்கு சுருண்டது.புதுச்சேரி அணியின் அபி மாத்தியூ 5 விக்கெட்டும், கவுரவ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
51 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய புதுச்சேரி அணி ஒரு விக்கெட் இழந்து, 51 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.7 முறை ரஞ்சிக்கோப்பை வென்று, 8 முறை ரஞ்சிக்கோப்பை இறுதி போட்டியில் ஆடிய பலம் வாய்ந்த டில்லி அணியை, அவர்கள் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது.
பெண்கள் அணி வெற்றி
இதே போல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஒடிசாவில் சீனியர் பெண்களுக்கான ஒருநாள் போட்டிகள் நடந்து வருகிறது.
இதில், பலம் வாய்ந்த கர்நாடகா அணியை வெற்றி பெற்ற புதுச்சேரி அணி, கடந்த 7 ம் தேதி பீகார் அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய புதுச்சேரி அணி 50 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்தது. சோனால் பாட்டீல் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய பீகார் அணி 42.5 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.புதுச்சேரி அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புதுச்சேரியின் தமன்னா நிகம் 3 விக்கெட்டும், ஆஷா மற்றும் அபிராமி தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.