/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருப்பாவையில் அரிய வானவியல் நிகழ்வு ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் ருசிகரம்
/
திருப்பாவையில் அரிய வானவியல் நிகழ்வு ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் ருசிகரம்
திருப்பாவையில் அரிய வானவியல் நிகழ்வு ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் ருசிகரம்
திருப்பாவையில் அரிய வானவியல் நிகழ்வு ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் ருசிகரம்
ADDED : டிச 29, 2025 05:50 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவத்தில், நேற்று 13 நாளில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் நிகழ்த்திய உபன்யாசம்:
திருப்பாவையில் வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்று என்ற பாசுர வரியில் ஆண்டாள் மிகப் பெரிய விஞ்ஞான உண்மையைச் சொல்லியுள்ளாள்.
ஆண்டாள் இப்பூமியில் வாழ்ந்ததாகக் கணிக்கப்பட்ட காலத்தில் சுக்ரனான வெள்ளி ஒரு பக்கம் தோன்ற, வியாழன் நேரெதிர் பக்கம் மறைந்த ஒரு அரிதான வானவியல் நிகழ்வு நடந்துள்ளதை வானவியல் குறிப்புகள் பறைசாற்றுகின்றன.
இத்தனைக்கும், தொலை நோக்கி என்ற விஞ்ஞானக் கருவி கண்டுபிடிக்கப்படாத காலம் அது. ஆனால் ஆண்டாள் உள்ளிட்ட நம் முன்னோர்கள் மெய்ஞானம் என்ற தொலைநோக்கி மூலம் தற்போது விஞ்ஞானம் சொல்லும் பல உண்மைகளை தத்துவார்த்தமாக, மறைப் பொருளாக, உணர்த்தியுள்ளார்கள்.
அவ்வகையில், ஆண்டாள் ஒரு அதிசய வானவியல் நிகழ்வு குறித்து துல்லியமாக, ஒரு வாக்கியத்தில் 'வெள்ளியெழுந்து வியாழன் உறங்கிற்று' என்று எளிதாகக் கூறியுள்ளாள்.
வான சாஸ்த்ரத்தில் வியாழனும் சுக்ரனும் ஒன்றாகத் தெரிவது அரிய நிகழ்வு. அது போன்று விடியற் காலையில் வெள்ளி தெரியும் நாளிலிருந்து பத்து மாத முடிவில் மீண்டும் மாலை நேரத்திலும் தெரியும். அவ்வாறு மாலை நேரத்தில் தெரிந்த நாளிலிருந்து 2.5 ஆண்டுகள் முடிவில் மீண்டும் காலை நேரத்திலும் தெரியும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
அதன்படி, ஆண்டாள் சொன்ன 'வெள்ளி எழுந்து வியாழன் உறங்கும்' அபூர்வம் சென்ற 2011ல் மே 11ம் தேதியில் விடியற்காலை நேரத்திலும், மார்ச் 2012ல் மாலை நேரத்திலும் நடந்தது. அப்போது இரண்டு கிரகங்களும் தங்கள் வட்டப் பாதையில் வரும்போது, மிக அருகில் தோன்றின என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள்.
மீண்டும் 22-11-2065ல் இந்த இரண்டு கிரகங்களும் தங்கள் வட்டப்பாதையில் வரும் போது இடைவெளி சுருங்கி ஒரே புள்ளியாக -ஒளிப்பிழம்பாகத் தோன்றக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று விண்வெளி அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட அறிவியல் நிகழ்வை எளிதாக வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று பாசுர வரியில் உணர்த்தியுள்ளாள் ஆண்டாள்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

