/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரோவில்லில் அரிய ஆர்க்கிட் கண்காட்சி நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது
/
ஆரோவில்லில் அரிய ஆர்க்கிட் கண்காட்சி நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது
ஆரோவில்லில் அரிய ஆர்க்கிட் கண்காட்சி நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது
ஆரோவில்லில் அரிய ஆர்க்கிட் கண்காட்சி நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது
ADDED : டிச 26, 2024 05:44 AM

புதுச்சேரி: கொள்ளை அழகு கொண்ட அரிய ஆர்க்கிட், அயல்நாட்டு செடிகளை புரிந்து கொள்வதற்கான சிறப்பு கண்காட்சி ஆரோவில்லில் நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
அழகிய மலர்கள் நமக்கு எப்போதுமேஆனந்தம் தருபவை. அதிலும், ஒருவாரம் முதல் இரண்டு மாதம் வரை வாடாமல் இருக்கும் 'ஆர்க்கிட்' பூக்கள் கொள்ளை அழகுகொண்டவை.காணும் கண்களுக்குஅவற்றை பிரிய மனமிருக்காது.
வீடுகளில் அழகு தோட்டமாக ஆர்க்கிட்மலர் செடிகளை வளர்க்க பலரும் ஆசைப்படுகின்றனர். அதற்கான வழிமுறைகள் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
இதுகுறித்து பொதுமக்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 'ஆர்க்கிட்' சிறப்பு கண்காட்சி குயிலாப்பாளையம் ஆரோவில் ரோடு கால்வே காபி ரோஸ்டரில் நாளை 27ம் தேதி துவங்கி 29ம் தேதிவரை மூன்று நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் வேழம் இயற்கை அங்காடி, ஜீவராசி ட்ரஸ்ட் இதனை இணைந்து ஒருங்கிணைத்துள்ளன.
வேழம் இயற்கை அங்காடி நிறுவனர் மேத்தா சரஸ்வதி, ஜீவராசி ட்ரஸ்ட் நிறுவனர் மேத்தா தட்சிணாமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'காடுகளில் உள்ள மரங்கள், ஈரமான பாறைகளில் வளரும் ஆர்க்கிட்மலர் செடிகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிக முக்கியமானவை.
இந்த 'ஆர்க்கிட்' செடிகள் தற்போது வணிக ரீதியாக விற்பனைக்கு வருகின்றன.பசுமை குடில் அமைத்து பல 'ஆர்க்கிட்'மலர் செடிகள் வளர்க்கப்படுகின்றன. வண்ணம், வடிவத்தில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஆர்க்கிட்மலர்களை காணும்போது உற்சாகமாக இருக்கும்.
ஒவ்வொரு 'ஆர்க்கிட்' செடிகளும் நிச்சயம் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். ஆனால் 'ஆர்க்கிட்' செடிகள் சாதாரணமாக வளர்க்க முடியாது.
இவற்றின் வளர்ப்பு முறையே வேறு. இந்தியாவில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட 'ஆர்க்கிட்' இனங்கள் உள்ளன. இன்னும் கண்டுபிடிக்கப்படாமலும் பல உள்ளன.
ஆர்க்கிட்டானது மலர்ந்த பின் பல நாட்கள் வாடாமல் இருப்பது தனிச்சிறப்பு. இவை உலகின் எல்லா வகையான வாழிடங்களில் பல வகையில் இருக்கிறன. பல ஆர்க்கிட்கள், மரத்தைத் தொற்றிக்கொண்டு கொடிபோல் வளரும். சில வகை, தரையில் இருக்கும். எனவே, எங்களுடைய 'ஆர்க்கிட்' கண்காட்சியை பார்வையிடுவதன் மூலம் அனைத்து விஷயங்களை ஒரே குடையின் கீழ் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். விற்பனையும் உண்டு.
இதுமட்டுமின்றி அழகிய அயல்நாட்டு செடிகளும், இயற்கை பொருட்களும் காட்சிக்கும், விற்பனைக்கும் ஒரே குடையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரைநடைபெறும். மேலும் விபரங்களுக்கு 74484-99770, 70929-99770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

