ரேஷன் கார்டு கே.ஒய்.சி., பதிவு சிறப்பு முகாம் 24,686 அட்டைதாரர்கள் பயன்
ரேஷன் கார்டு கே.ஒய்.சி., பதிவு சிறப்பு முகாம் 24,686 அட்டைதாரர்கள் பயன்
UPDATED : அக் 03, 2026 02:01 AM
ADDED : அக் 03, 2026 01:57 AM
புதுச்சேரி: அமைச்சர் சிவக்கொழுந்து அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள தொகுதிகளில் ரேஷன்கார்டு கே.ஒய்.சி., பதிவு சிறப்பு முகாம் 3 நாள் நடந்தது. அமைச்சர்கள் சிவக்கொழுந்து, ராஜவேலு ஆகியோர் முகாம்களை துவக்கி வைத்தனர்.
மத்திய அரசின் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த சிறப்பு முகாமில் மொத்தம் 24 ஆயிரத்து 686 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற்றனர்.
இதில் 15 ஆயிரத்து 930 ரேஷன் அட்டைதாரர் களுக்கு இ.கே.ஒய்.சி., பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 6 ஆயிரத்து 13 பேருக்கு மொபைல் எண் இணைப்பும், 5 ஆயிரத்து 930 பேருக்கு மற்ற விவ ரங்கள் சரிபார்க்கப்பட்டது. 103 குறைகள் தொடர்பான மனுக்க ள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
