ADDED : அக் 03, 2026 07:46 AM
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பத்தை சேர்ந்தவர் குணசேகர் 43; கொத்தனார்.
இவரது மனைவி நீலாவதி, 42. இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். நீலாவதி, சுள்ளியாங்குப்பம் பால் சொசைட்டி அருகே ஸ்வீட் கடை நடத்தி வந்தார். நேற்று தினம் காலை குணசேகரின் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது.
குணசேகர், நீலாவதியை வழக்கம் போல் காலை 10:00 மணியளவில், ஸ்வீட் கடைக்கு அழைத்து சென்று விட்டு, வேலைக்கு சென்றார்.
மதியம் கடைக்கு சென்று பார்த்தபோது கடை மூடப்பட்டு இருந்தது. குணசேகர் விட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு நீலாவதி இல்லை. இதனிடையே, நீலாவதி வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு செல்வதாக, குணசேகரின் மொபைலுக்கு, வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு, கடையில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு சென்றது தெரியவந்தது.
இது குறித்து குணசேகர், கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
