/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கார்டு இ - கே.ஒய்.சி., பதிவு சிறப்பு முகாம்
/
ரேஷன் கார்டு இ - கே.ஒய்.சி., பதிவு சிறப்பு முகாம்
ADDED : ஆக 04, 2025 07:31 AM

புதுச்சேரி : வில்லியனுார் தொகுதியில் ரேஷன் கார்டுகள் இ- கே.ஒய்.சி., பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை, அனைத்து ரேஷன் கார்டுகளையும் இ- கே.ஒய்.சி., பதிவு செய்ய பொது சேவை மையத்தை அணுக அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, வில்லியனுார் தொகுதி மக்கள் சிரமமின்றி இ-கே.ஒய்.சி., பதிவு செய்ய, திருக்காமீஸ்வரர் கோவில் எதிரேயுள்ள வாணியர் திருமண நிலையத்தில் தி.மு.க., சார்பில், 2 நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
முகாமை எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேற்று துவக்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ராமன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.