/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கார்டு: ஆன்லைன் சேவை உடனடியாக துவங்க வலியுறுத்தல்
/
ரேஷன் கார்டு: ஆன்லைன் சேவை உடனடியாக துவங்க வலியுறுத்தல்
ரேஷன் கார்டு: ஆன்லைன் சேவை உடனடியாக துவங்க வலியுறுத்தல்
ரேஷன் கார்டு: ஆன்லைன் சேவை உடனடியாக துவங்க வலியுறுத்தல்
ADDED : நவ 22, 2025 05:58 AM
புதுச்சேரி: புதிய ரேஷன் அட்டை வழங்கல் மற்றும் ரேஷன் அட்டை பிரித்தல் தொடர்பான ஆன்லைன் சேவையை உடனே துவங்க வேண்டும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார்.
அவர், குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:
குடிமை பொருள் வழங்கல் துறையின் சார்பில், 18.08.2025 முதல் புதிய ரேஷன் கார்டு வழங்குதல், குடும்ப அட்டை பிரித்தல் உள்ளிட்ட பணிகள் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும். அதேசமயம் ஆதார் சேவை மையங்கள் மூலமாகவும் இந்த சேவைகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், இதுவரை எந்த சேவையும் ஆன்லைன் மூலமாக முறையாக செயல்படவில்லை.
இதனால், புதிய ரேஷன் கார்டு பெற முடியாமல் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கல்வி உதவித்தொகை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, குடும்ப அட்டையில் பெயர் இருக்கும் நிலை அவசியமானது என, தாலுகா அலுவலகங்களில் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ரேஷன் கார்டு பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், பல மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, குறிப்பிடப்பட்ட ஆன்லைன் சேவைகளை உடனடியாகச் செயல்படுத்த தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

