/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் அரிசி பற்றாக்குறை; எம்.எல்.ஏ., ஆடியோ வைரல்
/
ரேஷன் அரிசி பற்றாக்குறை; எம்.எல்.ஏ., ஆடியோ வைரல்
ADDED : மார் 31, 2025 07:38 AM
காரைக்கால்; காரைக்கால் ரேஷன் கடைகளில் இலவச அரிசி குறைவாக உள்ளதாக சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ., குடிமைப் பொருள் அதிகாரியிடம் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.
காரைக்காலில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி குறைவாக உள்ளதால் மக்கள் முழுமையாக பெறமுடியாத நிலை உள்ளது என, குடிமை பொருள் வழங்கல் துறை துணை இயக்குனரிடம் சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ., ஆடியோ மூலம் பேசி புகார் கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், 'காரைக்காலில் இலவச அரிசி வழங்குவதில் பல்வேறு புகார்கள் வருகிறது. முக்கியமாக அரிசி மக்களுக்கு சரியாக வழங்குவதில்லை. பல இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசி வழங்கப்படுகிறது.
எனவே அரிசி 95 சதவீதம் அனுப்ப சொல்லுங்கள். இருக்கிற அட்டைக்கு தகுந்தாற் போல் தாருங்கள்.
ரேஷன் கடைக்கு வந்து அரிசி இல்லை என்று மக்கள் குறை கூறுகின்றனர். புதுச்சேரியில் இருந்து முழுமையாக அரிசி வாங்கி, அனைவருக்கும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என, தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி கூறுகையில், 'காரைக்கால் ரேஷன் கடைகளில் சராசரியாக 40ரேஷன் அட்டைகள் அரிசி வாங்காமல் விடுபடுகிறது.
உடனடியாக மஞ்சள் அட்டையில் விடுபட்ட அரிசி இருந்தால் சிவப்பு அட்டைக்கு தர கூறுகிறோம்.
புதுச்சேரி குடிமைப்பொருள் இயக்குநரிடம் இதுபற்றி தெரிவித்து முழுமையாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.