/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் நன்றி
/
முதல்வர் ரங்கசாமிக்கு ரேஷன் கடை ஊழியர்கள் நன்றி
ADDED : ஆக 12, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் அடிப்படை ஊதிய உயர்வு பெற்ற நியாய விலைக் கடை ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியை நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரியில் மூடப்பட்டிருந்த நியாய விலைக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை ஊதியத்தை ரூ.4 ஆயிரத்து 500ல் இருந்து ரூ.12 ஆயிரமாக முதல்வர் ரங்கசாமி உயர்த்தி கடந்த 5ம் தேதி வழங்கினார். இதையொட்டி புதுச்சேரி நியாயவிலைக் கடை ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியை, நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.