/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
/
குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
ADDED : டிச 13, 2024 11:16 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள், குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் மூடப்பட்ட ரேஷன் கடைகள், 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த, அக்.21,ம் தேதி திறக்கப்பட்டு தீபாவளி பரிசு பொருட்களாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்பட்டது.
தற்போது புதுச்சேரி முழுவதும், 370 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், 400,க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த, 2024-25,ம் நிதியாண்டு மார்ச் மாதம் வரை, ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், கடைகளை புனரமைக்கவும் மின் கட்டணம் செலுத்துவதற்காகவும், குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
சம்பளத்திற்கும், கடைகளை புனரமைக்கவும் அரசு ஒதுக்கிய நிதியை முழுமையாக வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மறுப்பதாக கூறி, ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தின் உள்ளே அமர்ந்தும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

