/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொசுக்களை கட்டுப்படுத்த 60 ஆயிரம் வீடுகளில் கள ஆய்வு சுகாதார துறை இயக்குநர் ரவிச்சந்திரன் தகவல்

ADDED : பிப் 18, 2025 06:39 AM
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 60 ஆயிரம் வீடுகளில், கள ஆய்வு செய்துகொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சுகாதார துறை இயக்குநர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொசு உற்பத்தியை தீவிரமாக கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள், மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் போன்ற உபகரணங்கள் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. மேலும் கடந்த அக்டோபர் 2024 முதல் ஜனவரி 2025 வரை, புதுச்சேரி மாநிலத்தில் வீடுகள் தோறும் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இதுவரை புதுச்சேரியில் 45,000 வீடுகளும் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 15,000 வீடுகளும் கள ஆய்வு செய்யப்பட்டது.
அந்தவீடுகளில் நன்னீர் தேங்கி கொசு உற்பத்தியாகும்பிளாஸ்டிக் டப்பாக்கள், ஆட்டுரல், இளநீர் குடுவைகள், தேவையற்ற டயர் போன்ற பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், புகை மருந்து அடித்தல், வாய்க்கால்களில் கொசு புழுக்களை அழிக்க மருந்துகள் தெளித்தல் போன்ற களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொசுக்களை ஒழிப்பது என்பது ஒரு கடினமான இலக்கு. பொதுமக்களும் அவர்களது இல்லங்களில் தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கொசுக்களால் உண்டாகும் நோய்களை தவிர்க்க, புதுச்சேரி அரசு வகுக்கும் தடுப்பு திட்டங்களுக்கு பொது மக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிக அவசியம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.