/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிறப்பு, இறப்பு சான்றிதழ் மீண்டும் விநியோகம் துவக்கம்
/
பிறப்பு, இறப்பு சான்றிதழ் மீண்டும் விநியோகம் துவக்கம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ் மீண்டும் விநியோகம் துவக்கம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ் மீண்டும் விநியோகம் துவக்கம்
ADDED : ஆக 15, 2025 03:17 AM

புதுச்சேரி: கடந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்ட பிறப்பு இறப்பு சான்றிதழ் மீண்டும் விநியோகம் செய்யும் பணி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுசேவை மையங்களில் துவங்கியது.
புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர பொது சேவை மையங்களிலும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பொது மக்களுக்கு கிடைக்கிறது.
அரசின் நலத்திட்டங்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ஆதார் அவசியம் தேவைப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. பொது சேவை மையங்களிலும் இச்சான்றிதழ்கள் கிடைக்கவில்லை. பொதுமக்கள் கடும் அலைகழிப்பிற்குள்ளாகி வந்தனர்.
நேற்றும் எந்த அலுவலகங்களில் பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என, உள்ளாட்சி துறைக்கு புகார்கள் சென்ற நிலையில் ஒருவழியாக மாலை 3:30 மணியளவில் அனைத்து பிரச்னைகளும் சரியாகி, சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
பொதுசேவை மைய உரிமையாளர்கள் கூறுகையில், 'நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, பொதுசேவை மையத்தில் வழங்கப்படும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் அனைத்தும் கிளவுட் கம்ப்யூட்டிங்கில் ஆண்டு தணிக்கை செய்வதற்காக நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஆனதால் கடந்த ஒருவாரமாக பிறப்பு இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை. பிறப்பு இறப்பு சான்றிதழ் விநியோகம் தடைபடாமல் கிடைக்க மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு தணிக்கை தொகை செலுத்துவதை முன் கூட்டியே திட்டமிட்டு செலுத்த வேண்டும்' என்றனர்.