/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்களுக்கான வாசித்தல் திருவிழா
/
மாணவர்களுக்கான வாசித்தல் திருவிழா
ADDED : ஜன 09, 2026 08:09 AM

திருபுவனை: புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் வாசித்தல், பன்முக கல்வி ஆற்றல் மற்றும் சாதனைகளை கொண்டாடும் வகையில 'வாசித்தல் திருவிழா' நடந்தது.
பள்ளியின் பொறுப்பாசிரியர் மீரா வரவேற்றார். சிலுக்காரிப்பாளையம் ஊர் தலைவர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குழந்தைகளின் வாசித்தல் திருவிழாவை தொடங்கி வைத்து, பேசினர்.
ஆண்டியார்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராமு, பி.எஸ். பாளையம் அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களின் வாசித்தல் திறமை, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.
ஆசிரியர் பாரதிராஜா நன்றி கூறினார்.

