ADDED : அக் 04, 2024 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில், காந்தி ஜெயந்தியையொட்டி, மாணவர்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடற்கரை காந்தி சிலை முன்பு நடந்த நிகழ்ச்சியில், வாசகர் வட்ட செயலாளர் சம்பத்குமார் காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், அகில இந்திய திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மைய நிறுவனர் குறளரசி, சீதளாதேவி, மூத்த வழக்கறிஞர் பரிமளம், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன், கலைவாணி, ஓவியர் ஷியமலா, மோகனப்பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

