ADDED : நவ 27, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : 75வது தேசிய அரசியலமைப்பு தின விழாவையொட்டி, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணையம் சார்பில் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு நிகழ்ச்சி ஆணையம் வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆணைய தலைவர் முத்துவேல் அரசியலமைப்பு முகவுரையை வாசித்தார். மாவட்ட ஆணைய உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜபிரகாஷ், வழக்கறிஞர்கள் கதிர்வேல், லட்சுமணன், பாலமுருகன், ராமதாஸ், தேவேந்திரன், இன்ப குலசேகரன், செல்வகுமார், கல்யாணி, திவான் ஜேக்கப் மற்றும் மாவட்ட நுகர்வோர் ஆணையர் ராஜேந்திரன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆணைய பதிவாளர் விஜயா செய்திருந்தார்.

