/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சட்டசபை தேர்தலில் மீண்டும் ஜெயிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார்' பா.ஜ., பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா சவால்

ADDED : அக் 25, 2024 06:19 AM

புதுச்சேரி: மாநிலத்தில் வரும் 31ம் தேதிக்குள் 1.50 உறுப்பினர்களைசேர்க்கவேண்டும் என பா.ஜ.பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறியுள்ளார்.
புதுச்சேரியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் அடுத்த கட்டமாக, தீவிர உறுப்பினர்களுக்கான மாவட்ட வாரியான கூட்டம், மாநில துணைத் தலைவர் அகிலன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, வெங்கடேசன், ராமலிங்கம், பொதுச் செயலாளர் மோகன் குமார், மவுலி தேவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேசியதாவது:
மாநிலத்தில் பா.ஜ., தீவிர உறுப்பினராக இதுவரை 1.20 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் 31ம் தேதிக்குள் 1.50 லட்சம் பேர் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.அதில், 1500 பேருக்கு மேல் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும்.
எனவே வரும் 2026 ம் ஆண்டு புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் நாம் வெற்றிப் பெற்று, பா.ஜ.,வின் கூட்டணி ஆட்சி மீண்டும் அமையும். அப்படி அமையாவிட்டால், 34 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட நான், இந்த அரசியலை விட்டே விலகத் தயார். நமது கட்சி தொண்டர்களின் அயராது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து இதை சவாலாகவே சொல்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.