UPDATED : நவ 28, 2026 08:51 PM
ADDED : நவ 28, 2026 08:48 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: குற்ற வழக்குளில் தொடர்புடையவர் ஊருக்குள் நுழைவதற்கு தடை விதிக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தவளக்குப்பத்தை சேர்ந்தவர் விஷ்ணு,20. இவர் மீது கஞ்சா வழக்கு, அடிதடி தகராறு, பொதுமக்களை மிரட்டுதல் உள்ளிட்ட வழக்குகள் தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறது.
இவர் ஊருக்குள் நுழைந்தால் பல பிரச்னைகள் வரும் என்பதால், ஊருக்குள் வருவதற்கு தடை விதிக்க தவளக்குப்பம் போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளனர்.
