/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் சாதனை புதுச்சேரி மாணவர்கள் பதக்கம் வென்றனர்
/
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் சாதனை புதுச்சேரி மாணவர்கள் பதக்கம் வென்றனர்
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் சாதனை புதுச்சேரி மாணவர்கள் பதக்கம் வென்றனர்
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் சாதனை புதுச்சேரி மாணவர்கள் பதக்கம் வென்றனர்
ADDED : ஜூன் 07, 2024 06:49 AM
புதுச்சேரி : எஸ்.ஓ.எஃப்., ஒலிம்பியாட் தேர்வில் புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அறிவியல் ஒலம்பியாட் அறக்கட்டளை மூலம் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பியாட் தேர்வுகளை சமீபத்தில் நடத்தியது. இதில், புதுச்சேரியைச் சேர்ந்த 16,781 மாணவர்கள் பங்கேற்றனர்.தேர்வில் வெற்றியாளர்கள், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா புதுடெல்லி நடந்தது. விழாவில், விக்ரம் சாராபாய் நிறுவன விஞ்ஞானி ராஜன், இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செயலாளர் ஆஷிஷ் மோகன், எபியன்ஸ் சாப்ட்வேர் நிறுவன ரவி, முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் திரைக் கதை எழுத்தாளர் சேத்தன் பகத் ஆகியோர் பங்கேற்றனர்.இதில், தி ஸ்டேடி எல் இக்கோல் இன்டர்நெஷனல் பள்ளியின் 7ம் வகுப்பு மாணவன் சித்தார்த் லக்ஷ்மிஷா, தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் சர்வதேச அளவில் 69வது இடத்தைப் பிடித்து மண்டல வெண்கலப் பதக்கமும், தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பிளஸ்1 மாணவி தனிஷா, சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் 80வது இடத்தைப் பெற்று, தகுதிச் சான்றிதழுடன் மண்டல வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.விழாவில் மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட 3,500 ஆசிரியர்கள் கவுரவிக்கப் பட்டனர்.அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை நிறுவன இயக்குனர் மஹாபீர் சிங் பேசுகையில், ஒலிம்பியாட் தேர்வுகளை ஏற்பாடு செய்து 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கான தேர்வுகளில் 70 நாடுகளில் இருந்து 91,000 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்' என்றார்.