/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு இன்றும், நாளையும் 'ரெட் அலர்ட்': மீட்பு பணிக்கு அரசு நிர்வாகம் தயார்
/
புதுச்சேரிக்கு இன்றும், நாளையும் 'ரெட் அலர்ட்': மீட்பு பணிக்கு அரசு நிர்வாகம் தயார்
புதுச்சேரிக்கு இன்றும், நாளையும் 'ரெட் அலர்ட்': மீட்பு பணிக்கு அரசு நிர்வாகம் தயார்
புதுச்சேரிக்கு இன்றும், நாளையும் 'ரெட் அலர்ட்': மீட்பு பணிக்கு அரசு நிர்வாகம் தயார்
ADDED : நவ 29, 2024 04:22 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு இன்றும், நாளையும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதையொட்டி, அனைத்து துறைகளும்24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழவு நிலை தற்காலிக புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த புயல் புதுச்சேரியில் கரையை கடக்க நேரிடும் என்று 'ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அனைத்து துறை தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் குலோத்துங்கன் பேசியதாவது:
புதுச்சேரிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்காக 121 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதால், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை முகாம்களில் தங்க வைக்க அந்தந்த பகுதி வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம்களில் தங்குவோர்களுக்கு தேவையான உணவு வழங்க அனைத்து ஏற்பாடுகளை குடிமை பொருள் வழங்கல் துறை செய்திட வேண்டும்.
தாழ்வான பகுதிகள்:
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் மக்களை வெளியேற்ற 50 படகுகளும், மழைநீரை வெளியேற்ற 60 ராட்சத மோட்டார்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பை தவிர்க்க பெரிய மரங்களின் கிளைகளை கழிக்கவும், இதற்கு தேவையான உபகரணங்களான 'பவர் ஷா' அதற்கான எரிபொருட்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பெரிய மரக்கிளைகளை வெட்ட கிரேன் தயார் நிலையில் வைத்திருக்க பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கனமழையில் பாம்புகள் வீடுகளில் புகும் என்பதால் அவற்றை பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் பிடிக்க வனத் துறையின் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கட்டுப்பாட்டு அறை:
ஏற்கனவே ஆழ்கடலில் உள்ள விசைபடகுகள் கரைக்கு வந்துவிட்டன. இருப்பினும் எந்த வகையான படகுகளும் கடலுக்குள் செல்ல அனுமதிக்ககூடாது. கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கிட கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து துறைகளும் முழு வீச்சில் தயாராக உள்ளதாக தெரிவித்தன.
கூடுதல் பேரிடர் குழு
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே 2 யூனிட் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் புயல் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை தொடர்ந்து மேலும், இரு யூனிட் தேசிய பேரிடர் மீட்புக் குழு மாவட்ட நிர்வாகத்தால் கோரப்பட்டுள்ளது.