/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் மண்டல வளர்ச்சி ஆணையர் கவர்னருடன் சந்திப்பு

ADDED : ஏப் 04, 2025 04:14 AM

புதுச்சேரி: மத்திய வர்த்தக அமைச்சகத்தின் சென்னை ஏற்றுமதி மேம்பாட்டு மண்டல வளர்ச்சி ஆணையர் அலெக்ஸ் பால் மேனன், இணை ஆணையர் ஆர்த்தர் ஓர்ச்சியுவோ ஆகியோர், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர்.
சந்திப்பின் போது, தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய மண்டலத்தில் ஏற்றுமதி வளர்ச்சியில் எம்.இ.பி.இசட் அமைப்பின் பங்களிப்பு குறித்து அதிகாரிகள் விவரித்தனர். மேலும், புதுச்சேரியில் தோல்பொருள் அல்லாத மற்ற காலணி தயாரிப்புகள் மற்றும் கடல்சார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க எம்.இ.பி.இசட் அதிகாரிகளை கவர்னர் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் பணிபுரியும் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோடு, புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவும்.
புதுச்சேரி அரசுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளிக்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
புதுச்சேரி அரசு வளர்ச்சி ஆணையர் ஆஷிஷ் மாதவராவ் மோரே, கவர்னரின்செயலர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தார்.