/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இன்றைக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்
/
எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இன்றைக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்
எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இன்றைக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்
எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இன்றைக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்
ADDED : அக் 15, 2024 06:23 AM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க இன்றைக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த சென்டாக் ரெடியாகி வருகின்றது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க பதிவு கட்டணம் 14ம் தேதி மாலை 5 மணி வரை செலுத்த வேண்டும் என ஏற்கனவே சென்டாக் அறிவுறுத்தி இருந்தது.
இந்த பதிவு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை, இன்று 15ம் தேதி மாலை 5 மணிவரை சென்டாக் நீட்டித்துள்ளது. முதற்கட்ட கலந்தாய்வு, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் பெற்ற மாணவர்கள் அந்த சீட் தேவை இல்லையெனில் தங்களுடைய லாகின் வாயிலாக உள்ளே நுழைந்து விலகல் கடிதம் சமர்பித்து விலகி கொள்ள வேண்டும். இதேபோல் என்.ஆர்.ஐ., சீட்களை நிரப்ப சென்டாக் முடிவு செய்துள்ளது. எனவே என்.ஆர்.ஐ., பிரிவினர் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., படிப்பினை பொருத்தவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொது, ஓ.பி.சி., எம்.பி.சி., இடபுள்யூ.எஸ்., மீனவர், முஸ்லீம், பி.டி., பிரிவினர் 1 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதுமானது.
நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ., சீட்டுகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க 2 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க பதிவு கட்டணம் செலுத்தி, சீட் கிடைக்காத மாணவர்கள் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பதிவு கட்டணம் தேவையில்லை.
எம்.பி.பி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சீட் ஒதுக்கப்பட்டு, கல்லுாரியில் சேராத மாணவர்களின் பதிவு கட்டணம் திருப்பி தரப்படாது. எனவே இம்மாணவர்கள் மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பினால் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்தி, படிப்பு, கல்லுாரிகளை முன்னுரிமை கொடுக்க வேண்டும். மூன்றாம் கட்ட கலந்தாய்வில் சீட் கிடைக்காத மாணவர்களுக்கு அவர்கள் கட்டிய பதிவு கட்டணம் திரும்பி அளிக்கப்படும்.
மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க பதிவு கட்டிய அனைத்து மாணவர்களும் படிப்புகளையும், கல்லுாரிகளையும் புதிதாக முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய வேண்டும்.
மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, சீட் ஒதுக்கப்பட்டால், ஏற்கனவே இரண்டாம் கலந்தாய்வில் கிடைத்த சீட் தானாகவே ரத்தாகிவிடும் என்று சென்டாக் எச்சரித்து கலந்தாய்வு பணிகளை வேகப்படுத்தி வருகின்றது.