ADDED : அக் 20, 2026 05:28 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஐயங்குட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதன்ராஜ் மனைவி மைதிலி,36; தமிழக அரசு நர்ஸ். மதன்ராஜ் இலங்கையில் வேலை செய்து தற்போது மூன்று மாத விடுப்பில் வீட்டில் உள்ளார்.
மைதிலியின் தங்கைக்கும் தர்மாபுரியை சேர்ந்த கேசவன் என்பவருக்கும் திருமணம் முடிந்து, கருத்து வேறுபாட்டால், விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை 9:25 மணியளவில், மைதிலியின் யமகா ஸ்கூட்டர் கீழே விழும் சத்தம் கேட்டுள்ளது. மைதிலி வெளியே வந்து பார்த்த போது கேசவன் ஸ்கூட்டரை உடைத்து, தனது மனைவியின் பிரிவிற்கு நீங்கள் தான் காரணம் என திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
மைதிலி புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
