/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வெளியீடு: எம்.பி.பி.எஸ்.,க்கு ரூ.4 லட்சம் நிர்ணயம்
/
மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வெளியீடு: எம்.பி.பி.எஸ்.,க்கு ரூ.4 லட்சம் நிர்ணயம்
மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வெளியீடு: எம்.பி.பி.எஸ்.,க்கு ரூ.4 லட்சம் நிர்ணயம்
மருத்துவ படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வெளியீடு: எம்.பி.பி.எஸ்.,க்கு ரூ.4 லட்சம் நிர்ணயம்
ADDED : ஆக 24, 2024 06:09 AM

புதுச்சேரி: எம்.டி., எம்.எஸ்., எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்வி கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.டி., எம்.எஸ்., எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கு சென்டாக் மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் அடிப்படையிலான படிப்புகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை கவர்னர் ஒப்புதலுடன் இறுதி செய்து உயர் கல்வித் துறை வெளிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவம்
எம்.டி.,எம்.எஸ்.,உள்ளிட்ட கிளினிக்கல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு தலா ரூ. 7 லட்சத்து 95 ஆயிரமும், நிர்வாக இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு ரூ.23 லட்சத்து 90 ஆயிரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நான்-கிளினிக்கல் மருத்துவ படிப்புகளுக்கு அரசு இட ஒதுக்கீட்டுக்கு ரூ.6 லட்சத்து 55 ஆயிரமும், நிர்வாக இடஒதுக்கீட்டுக்கு ரூ.13 லட்சத்து 5 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
முதுநிலை பல் மருத்துவம்:
அதுமட்டுமின்றி மாகி பல் மருத்துவ கல்லுாரியில் உள்ள முதுநிலை கிளினிக்கல் பல் மருத்துவ படிப்புகளுக்கு அரசு இடஒதுக்கீட்டிற்கு ரூ.6 லட்சத்து 22 ஆயிரமும், பாரா கிளினிக்கல் இடங்களுக்கு 5 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்கல்லுாரியின் கிளினிக்கல் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.14 லட்சமும், பாரா கிளினிக்கல் இடங்களுக்கு 7 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் கிளினிக்கல் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 6 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய், நிர்வாக இடங்களுக்கு 14 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளநிலை பல் மருத்துவம்
மாகி பல் மருத்துவ கல்லுாரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3 லட்சம் ரூபாய், நிர்வாக இடங்களுக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.,கட்டணம்
இந்த கல்வியாண்டில் (2024--25) அரசு இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., சேரும் மாணவர்களுக்கு பிம்ஸ் மருத்துவக்கல்லுாரி, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லுாரியில் 4 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லுாரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு தலா 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு 21 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நர்சிங்
இதேபோல் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளை பொருத்தவரை மணக்குளவிநாயகர், பிம்ஸ், இந்திராணி, சபரி ஆகிய செவிலியர் கல்லுாரியில் சேர தலா 52 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டடுள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் கல்லுாரி, ஏ.ஜி. பத்மாவதி, ராக், இமாகுலேட், கிறிஸ்ட், விவேகானந்தா கல்லுாரிக்கு தலா ரூ.42 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி கட்டண குழு நிர்ணயித்துள்ள இக்கட்டணத்தை மட்டுமே கல்லுாரிகள் பெற வேண்டும்.
கூடுதலாக கட்டணம் பெற்றால், அக்கல்லுாரியின் பல்கலைக்கழகம், தேசிய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

