/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : டிச 22, 2024 06:59 AM

பாகூர் : பாகூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகளை வழங்கினார்.
பாகூர் பழைய காமராஜர் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி 45; தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது பிள்ளைகளுடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை வீட்டின் வழியாக சென்ற மின்கம்பி அறுந்து கூரை வீட்டின் மேலே விழுந்துள்ளது. இதனால், கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமி, அவரது குடும்பத்தினருடன் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்து பொருட்கள் எரிந்து சேதமானது. தகவலறிந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ., தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறி, வருவாய் துறை மூலமாக நிவாரண உதவிகளை வழங்கினார். தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.