/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம்
ADDED : பிப் 09, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பனையடிக்குப்பம் கிராமத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணை சபாநாயகர் ராஜவேலு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நெட்டபாக்கம் அடுத்த பனையடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 45; கூலித்தொழிலாளி. இவரது கூரைவீடு கடந்த 5ம் தேதி இரவு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது.
தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து வீட்டில் இருந்து டி.வி., அலமாரி, பிரிட்ஜ், துணி மணிகள் சாம்பலானது.
இதையடுத்து துணை சபாநாயகர் ராஜவேலு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரிசி, துணி மணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.