sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விசைபடகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

 விசைபடகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்

 விசைபடகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்


ADDED : டிச 06, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 05:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடந்தாண்டு, புயலில் சேதமான கட்டுவலை விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரண தொகையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

கடந்தாண்டு பெஞ்சல் புயலால் இயந்திரம் பழுதாகி சேதமடைந்த பதிவு பெற்ற 50 கட்டுவலை விசைப் படகுகளுக்கு தலா ரூ.10,000 வீதம் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

அதையடுத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் கோப்புகள் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது பதிவு பெற்ற 50 கட்டுவலை விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் பெஞ்சல் புயல் நிவாரணமாக வழங்க ரூ.5 லட்சத்திற்கு ஒப்புதல் அரசால் வழங்கப்பட்டது.

இதற்கான நிவாரண செலவின ஆணையை சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி கட்டுவலை இயந்திர படகு உரிமையாளர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், பாஸ்கர் எம்.எல்.ஏ., மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வசிகாமணி, துணைஇயக்குநர் கோவிந்தசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us