/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நிவாரண பொருட்கள் பாகூரில் வழங்கல்
/
நிவாரண பொருட்கள் பாகூரில் வழங்கல்
ADDED : டிச 26, 2024 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட பாகூர், குருவிநத்தம், மணமேடு உள்ளிட்ட பகுதியில், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் சி.எஸ்.ஆர். குழு, புதுச்சேரி ரவுண்ட் டேபிள் உள்ளிட்ட 167 தொண்டு நிறுவனங்கள் சார்பில், அந்த பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்,எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் சார்பில், புனித் போத்ரா, வெங்கட்ரமணி உள்ளிட்ட தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.