/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு பரிகார பாத யாத்திரை
/
வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு பரிகார பாத யாத்திரை
ADDED : அக் 13, 2024 07:50 AM

வில்லியனுார் : வில்லியனுார் மாதா ஆலயத்திற்கு பரிகார பாதயாத்திரை நடந்தது.
புதுச்சேரியில் கடந்த 1977ம் ஆண்டு அக்., மாதம் புயல் தாக்கி,பேரழிவு ஏற்படுத்தும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்ததால் மக்கள்அஞ்சினர். அப்போதைய புதுச்சேரி - கடலுார் மறை மாவட்ட பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆண்டகை, புயலில்இருந்து மக்களை காப்பாற்ற வில்லியனுார் மாதாவிடம் வேண்டினார்.
மாதாவின் அருளால் புதுச்சேரியில் புயல் கரையை கடக்காமல் வேறு இடத்திற்கு சென்றது. இதனால் பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆண்டகை தலைமையில் கடந்த 1977ம் ஆண்டு அக்., 10ம் தேதி நன்றி பாதயாத்திரை நடத்தினார். அடுத்த ஆண்டிலிருந்து நன்றி பாதயாத்திரை பரிகார பாதயாத்திரையாக மாற்றி ஆண்டுதோறும் அக்., 2வது சனிக்கிழமையன்று தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அதன்படி 46வது பரிகார பாதயாத்திரையை முன்னிட்டு நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில் புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி பரிகார பாத யாத்திரை துவக்கி வைத்தார். தேர்பவனியை ஆலய பங்குத்தந்தை ரொசாரியோ துவக்கி வைத்தார்.
மாலை 5:30 மணியளவில் வில்லியனுார் லுார்து அன்னை ஆலயத்திற்கு சென்றனர். அங்கு புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருப்பலி நடந்தது.
ஏற்பாடுகளை வில்லியனுார் லுார்து அன்னை ஆலய பங்குத்தந்தை ஆல்பர்ட் தலைமையில் செய்திருந்தனர்.