/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டர் மீடியனில் பேரிகார்டு அகற்றம் இந்திரா சிக்னலில் மீண்டும் விபத்து அபாயம்

ADDED : நவ 08, 2024 05:26 AM

புதுச்சேரி: இந்திரா சிக்னலில் பேரிகார்டுகளை அகற்றிவிட்டு வாகன ஓட்டிகள் பிரிலெப்டில் குறுக்கே புகுந்து வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி இந்திரா சிக்னல் அருகே, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கம் செல்லும் பாதையில், பிரிலெப்ட் பாதையை பிரிக்க சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
இதில், தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் சென்டர் மீடியனில் 20 அடி அகலத்திற்கு இடைவெளி விடப்பட்டது. பூமியான்பேட்டை வரை சிக்னலில் காத்திருக்க முடியாத வாகனங்கள், பிரிலெப்ட் வழியாக வந்து மீடியன் இடைவெளியில் புகுந்து வரிசையாக புகுந்தனர்.
இதனால், பிரிலெப்ட்டில் விபத்து அபாயம் ஏற்பட்டது. அதையடுத்து கடந்த மாதம் 17 ம்தேதி பேரிகார்டுகள் போட்டு தேவையில்லாத சென்டர் மீடியன் இடைவெளி போக்குவரத்து போலீசார் மூடினர். இப்போது அடைக்கப்பட்ட அந்த பேரிகார்டுகளை அகற்றிவிட்டு பிரிலெப்டில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக குறுக்கே புகுந்து செல்லுகின்றனர். இதேபோல் பிரிலெப்டில் எதிரும் புதிருமாக வாகன ஓட்டிகள் வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் மீண்டும் விபத்து அபாயம் உள்ளது. எனவே இந்த இடத்தில் தற்காலிக பேரிகார்டுகளுக்கு பதிலாக நிரந்தரமாக சிமெண்ட் தடுப்பு கட்டைகள் போட்டு தடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.