sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

 சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ADDED : மார் 12, 2026 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 03:43 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர்: மணமேடு கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கரையாம்புத்துார் அடுத்த மணமேடு கிராமத்தில் தென்பெண்ணையாறு சாலையில் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகளின் அருகே, சாலையை ஆக்கிரமித்து பெட்டி கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதியில் மதுப்பிரியர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிப்பதாக பொது மக்கள், கலெக்டர் குலோத்துங்கனிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிட கலெக்டர் உத்தவிட்டார். அதன்பேரில், நேற்று காலை பாகூர் தாசில்தார் ராஜலட்சுமி தலைமையில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் மணமேடு கிராமத்தில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின், கடை உரிமையாளர்கள், தாங்களாகவே கடைகளை அகற்றிக் கொள்ள கால அவகாசம் வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். நாளைக்குள் கடைகளை அகற்றிட வேண்டும் எனக் கூறி விட்டு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us