/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : நவ 12, 2024 07:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி அம்பலத் தடையார்மடம் வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது.
புதுச்சேரி நகர பகுதியில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. நேரு வீதி, மிஷன் வீதிகளை தொடர்ந்து கொசக்கடை வீதி (அம்பலத்தடையார் மடம் வீதி) ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது.
புதுச்சேரி நகராட்சி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து போலீசார் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அண்ணா சாலை முதல் ஆம்பூர் சாலை வரையிலான இடைப்பட்ட பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி., மூலம் இடித்து அகற்றப்பட்டது. புதுச்சேரி நகராட்சி ஆணையயர் கந்தசாமி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அரியாங்குப்பம்:
நைனார்மண்டபம் தென்னஞ்சாலை ரோட்டில் கீற்று கொட்டகை அமைத்து, மீன், காய்கறி கடைகள் வைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். அதே போல, வீடுகளில் உள்ள படிகட்டுகள் சாலை வெளி பகுதியில் இழுத்து கட்டப்பட்டிருந்தது. அதனால், அவ்வழியாக வாகனங்கள் நெரிசல் ஏற்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்தது. அதையடுத்து, நேற்று பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி., இயந்திரத்தை வைத்து, அப்பகுதியில் இருந்த கடைகளை அதிரடியாக அகற்றினர். பல ஆண்டுகளாக, ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

