/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டு கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
மதகடிப்பட்டு கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : டிச 27, 2024 05:53 AM
திருபுவனை: மதகடிப்பட்டில் உள்ள ஆற்காடு அய்யனாரப்பன் கோவில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை கிராம மக்கள் அகற்றினர்.
மதகடிப்பட்டு, புதுநகரில் உள்ள ஆற்காடு அய்யனாரப்பன் கோவிலை சுற்றி, 3 ஏக்கர் பரப்பளவிலான நிலம் உள்ளது. கோவில் இடத்தை பலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகம் காடந்த 15ம் தேதி நடந்தது.
தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்குழு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நீண்டகாலமாக ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள கோவில் நில ஆக்கிரமிப்பகளை அகற்றுவதென முடிவு செய்யப்பட்டது.
அதன்டி கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஜே.சி.பி., மூலம் கோவில் இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

