/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மிஷன் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
மிஷன் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : நவ 08, 2024 05:16 AM

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் சாலையோர ஆக்ரமிப்புகள் மற்றும் விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைதடுக்க கலெக்டர் குலோத்துங்கன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து புதுச்சேரி முழுவதும், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த, 4,ம் தேதி துவங்கியது. நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று, நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், 4வது நாளாக நேற்று மிஷன் வீதியில் உள்ள சாலையோர ஆக்ரமிப்புகளை, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், வருவாய், நகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து அகற்றினர்.
பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையில் இரு புறத்திலும் உள்ள ஆக்ரமிப்பு கடைகள், விளம்பர போர்டுகள், அதிரடியாக அகற்றப்பட்டன. தொடர்ந்து அகற்றப்பட்ட ஆக்ரமிப்பு பொருட்களை நகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றி சென்றனர்.
கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் பெரிய கடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

