/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : நவ 06, 2025 11:39 PM

புதுச்சேரி: செஞ்சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் விளம்பர பேனர்களை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகள் நேற்று (6ம் தேதி) முதல் 25ம் தேதி வரை பல்வேறு துறைகள் மூலம் அகற்றப்படும் என, கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று (6ம் தேதி) லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை - நாவலர் பள்ளி வரையிலும், செஞ்சி சாலையிலும் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், டிஜிட்டல் பேனர்கள், கட் அவுட்களை பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதில், இரண்டு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையின் இரு புறத்திலும் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், பெயர் பலகைகள், விளம்பர போர்டுகள், சிமெண்ட் கட்டைகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து, அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு பொருட்கள் நகராட்சி அதிகாரிகள் மூலம் லாரியில் ஏற்றி செல்லப்பட்டன.தொடர்ந்து, இன்று (7ம் தேதி) இ.சி.ஆர். ராஜிவ் சதுக்கம் முதல் மடுவுபேட் சந்திப்பு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

