/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை மேம்பாட்டு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 06, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனைபாளையத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
பிரதம மந்திரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் புதுச்சேரி அரசு திட்டத்தின் கீழ், திருபுவனைபாளையம் விநாயர் கோவில் நான்கு முனை சந்திப்பில் இருந்து திருவாண்டார் கோவில் சின்னபேட் வரை இணைப்புச் சாலையை மேம்படுத்தும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் ஜலீல், இளநிலை பொறியாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒப்பந்ததாரர் அருணகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

