/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்திற்கு இடையூறு நீர்மோர் பந்தல் அகற்றம்
/
போக்குவரத்திற்கு இடையூறு நீர்மோர் பந்தல் அகற்றம்
ADDED : மே 16, 2025 02:27 AM

புதுச்சேரி: போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கோடை கால நீர்மோர் பந்தலை, பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அகற்றினர்.
கோடை கால வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பகல் நேரங்களில், மக்கள் வெளியில் வரமுடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். அக்னி நட்சத்திரம் தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில், வாகனங்களில் செல்பவர்கள் முக்கிய சிக்னல்களில், வெயிலில் நின்று அவதிப்படுவதால், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், சிக்னல் பகுதியில், பசுமை பந்தல் அமைக்க போட்டி ஏற்பட்டது.
அதனால், பொதுப்பணித்துறை மூலம், முக்கிய சிக்னல்களில், பசுமை பந்தல் அமைத்துள்ளனர்.
கோடை வெயிலுக்காக, பல்வேறு இடங்களில், அரசியல் கட்சியினர் நீர்மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி தாகத்தை தனித்து வருகின்றனர். இந்நிலையில், நீர்மோர் பந்தல் மூலம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருதாக, முத்தியால்பேட்டை, எஸ்.வி.பட்டேல் சாலை, அஜந்தா சிக்னல் ஆகிய பகுதியில் இருந்த நீர்மோர் பந்தலை பொதுப்பணித்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர்.
மேலும், அந்த பகுதியில் இருந்து அரசியல் கட்சிகளின் பேனர்களை பொதுப்பணித்துறை ஊழியர்கள் அகற்றினர்.