/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பத்தில் பேனர்களை அகற்ற 2 நாட்களுக்குள் கெடு
/
அரியாங்குப்பத்தில் பேனர்களை அகற்ற 2 நாட்களுக்குள் கெடு
அரியாங்குப்பத்தில் பேனர்களை அகற்ற 2 நாட்களுக்குள் கெடு
அரியாங்குப்பத்தில் பேனர்களை அகற்ற 2 நாட்களுக்குள் கெடு
ADDED : ஜன 10, 2026 05:04 AM
அரியாங்குப்பம்: பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள, பேனர்களை இரண்டு நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என, ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையர் விநாயமூர்த்தி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சாலையோரங்கள், நடைபாதைகள் உள்ளிட்ட பொது இடங்களில், அனுமதியில்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்துக்கள் நடந்து வருகிறது.
எனவே, பேனர்கள் வைத்துள்ளவர்கள், தாமாகவே முன்வந்து, இரண்டு நாட்களுக்குள், பேனர்களை அகற்றி கொள்ள வேண்டும். இல்லை என்றால், பேனர்கள் வைத்தவர்கள் மீது அபராதம் விதித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
: