/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழுதுபார்த்தல் மறுபயன்பாட்டு முகாம்
/
பழுதுபார்த்தல் மறுபயன்பாட்டு முகாம்
ADDED : செப் 29, 2025 03:04 AM

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி சார்பில் பழுதுபார்த்தல் மற்றும் மறுபயன்பாட்டு முகாம் கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரு வார துாய்மை பணி கடந்த 17-ந் தேதி முதல் வரும் 2 -ந்தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி நகராட்சி சார்பில் பழுதுபார்த்தல் மற்றும் மறுபயன்பாட்டு முகாம் கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது.
முகாமை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.
முகாமில் தங்கள் வீடுகளில் பழுதான வீட்டு உபயோக பொருட்களான அயன்பாக்ஸ், மின்விசிறி, மின்சார அடுப்பு, கியாஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட பழுதடைந்த பழைய பொருட்களை கொண்டு வந்து இலவசமாக பழுது நீக்கி சென்றனர்.
முகாமில் நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், சுகாதார அதிகாரி ஆர்த்தி, வருவாய் பிரிவு அதிகாரிகள் சத்திய நாராயணன், பிரபாகரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக துணிப்பைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.