/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம் டி.ஜி.பி., தலைமையில் இன்று இறுதி ஒத்திகை
/
குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம் டி.ஜி.பி., தலைமையில் இன்று இறுதி ஒத்திகை
குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம் டி.ஜி.பி., தலைமையில் இன்று இறுதி ஒத்திகை
குடியரசு தின விழா பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம் டி.ஜி.பி., தலைமையில் இன்று இறுதி ஒத்திகை
ADDED : ஜன 24, 2025 05:46 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசு தின விழாவையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் டி.ஜி.பி., தலைமையில் இன்று இறுதி ஒத்திகை நடக்கிறது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை, காந்தி திடல் அருகில் நடக்கும் விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் தேசியக்கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதில் அலங்கார வண்டிகள் ஊர்வலம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகளை கவர்னர் கைலாஷ்நாதன் வழங்க உள்ளார்.
இந்த விழாவிற்கான இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. விழா தொடர்பாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனியார் ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அங்கு தங்கி உள்ள புதிய நபர்களின் விபரங்கள் காவல் துறையால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில எல்லைகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
சந்தேக நபர்களை பிடித்து, போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய சந்திப்புகளில், அந்தந்த போலீஸ் சரக எஸ்.பி.,க்கள் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விழா நடக்கும் கடற்கரை காந்தி சிலை பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நோயுடன் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில் டி.ஜி.பி., ஷாலினிசிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா தலைமையில், குடியரசு தின விழா இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி., பல்வேறு அறிவுரை மற்றும் ஆலோசனை களை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்க உள்ளார்.