ADDED : மார் 15, 2025 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி அனைத்து மாற்று திறனாளிகள் மறுவாழ்வு இயக்கம் சார்பில் கோரிக்கை விளக்க கருத்தரங்கம் நடந்தது.
இயக்க மாநில தலைவர் கார்த்திகேயன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் குமார், மாநில துணை செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு பொருளாளர் ஜான்பீட்டர் வரவேற்றார்.
புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய வழக்கறிஞர் புரட்சிக்குமார், கிருஷ்ணராஜ், பல்நோக்கு சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் சூடாமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதம், கல்வி மற்றும் நலத்திட்டங்களில் 5 சதவீதம் இடஒதுக்கீடு, வருமான உச்ச வரம்பை முற்றிலும் நீக்கி அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.