sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை

விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை

விளையாட்டு மைதானம் அமைத்துதர கோரிக்கை


ADDED : டிச 05, 2024 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2024 06:55 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: கைக்கிலப்பட்டில் இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள அரசு மினி விளையாட்டு மைதானம் அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்ணாடிப்பட்டு தொகுதி கைக்கிலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அப்பகுதியில் அரசு மூலம் விளையாட்டு மைதானம் ஏதுவும் ஏற்படுத்தி தரவில்லை.

இதனால், அப்பகுதி இளைஞர்கள் வேறுவழியின்றி தனியார் மனைப்பிரிவில் தற்காலிகமாக சிறிய வாலிபால் மைதானம் அமைத்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால், தற்காலிகமாக இளைஞர்கள் வாலிபால் விளையாடி வரும் மைதானம் முழுதும் மழைநீர் தேங்கி, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ள முடியவில்லை.

எனவே, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் அரசு மூலம் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us