/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
/
ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : டிச 06, 2024 04:55 AM
புதுச்சேரி : நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு வார காலமாக புயல் மற்றும் கனமழையால் கிராமப்புறங்களில் விவசாய தொழிலாளர்கள் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.
முதல்வர் ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த நிவாரணம் விவசாய தொழிலாளர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, காலம் கடத்தாமல் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும்,பதிவு செய்யாத விவசாய தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.