/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூரை வீடுகளுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
/
கூரை வீடுகளுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
கூரை வீடுகளுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
கூரை வீடுகளுக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : டிச 19, 2024 06:22 AM

புதுச்சேரி: கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்க 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி, புதுச்சேரி தாசில்தார் பிரதிவியை சந்தித்து அளித்த மனுவில், கூறியிருப்பதாவது:
பெஞ்சல் புயல் மற்றும் கன மழையால் உப்பளம் தொகுதி கடும் பாதிப்பு ஏற்பட்டது. தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏழை மக்களின் கூரை வீடுகள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் வீட்டு உபயோகப்பொருட்கள் நனைந்து சேதமடைந்துள்ளது.
சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சந்திப்பின்போது தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் சந்திரன், செல்வம், அசோக், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.