/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாய்க்காலை துார் வார கவனருக்கு கோரிக்கை
/
வாய்க்காலை துார் வார கவனருக்கு கோரிக்கை
ADDED : அக் 24, 2025 03:08 AM
புதுச்சேரி: வாய்க்கால்கள் துார் வாரி, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவர்னருக்கு, சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் எட்வர்டு சார்லஸ், கவர்னர் மற்றும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;
புதுச்சேரியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கனமழை பெய்தது. அதனால், சுதந்திர பொன்விழா நகர் சாலையில், குளம் போன்று மழைநீர் தேங்கி நின்றது.
குடியிருக்கும் வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்தது. மக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடுமையாக அவதியடைந்தனர்.
மழை காலம் துவங்கியதால், தொடர்ந்து, பாதிப்பு ஏற்படாத வகையில், புதுச்சேரி அரசு உடனடியாக, அப்பகுதியில் உள்ள வாய்க்கால்களை துார்வார, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில், தெரிவித்துள்ளார்.

