/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சர் நியமிக்க கோரிக்கை
/
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சர் நியமிக்க கோரிக்கை
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சர் நியமிக்க கோரிக்கை
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அமைச்சர் நியமிக்க கோரிக்கை
ADDED : அக் 11, 2025 05:59 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு உடனடியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு அமைச்சரை நியமிக்க வேண்டுமென பழங்குடியினர் விடுதலை இயக்கம், மாநில செயலாளர் ஏகாம்பரம் வலியுறுத்தி யுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில்கடந்த நான்கு மாதங்களாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக யாரை யும் நியமிக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் அந்தத் துறையின் பல முக்கிய நலத்திட்டங்கள், மக்கள் பிரச்னைகள் தீர்வு காணாமல் தாமதமடைந்து வருகின்றன. பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் கோரிக்கைகளை நேரடியாக பே சுவதற்கு அமைச்சர் இல்லாததால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு விஷயத்திற்கும், முதல்வரை சந்தித்து பேசுவது நடைமு றையில் சாத்தியமில்லை.
எனவே, அரசு உடனடியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு உரிய அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.